/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராசி மெட்ரிக் பள்ளி மாணவியர் சாதனை
/
ராசி மெட்ரிக் பள்ளி மாணவியர் சாதனை
ADDED : மே 14, 2025 02:09 AM
ஆத்துார், ஆத்துார், மல்லியக்கரை, ஈச்சம்பட்டியில் உள்ள ராசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து பொதுத்தேர்வு எழுதிய மாணவி ஆதிஸ்ரீ, 600க்கு, 592 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மாணவி சாதனா, 590, மாணவி ஹரிணிஷா, 586 மதிப்பெண்கள் பெற்று முறையே, 2, 3ம் இடங்களை பிடித்தனர். கணினி அறிவியலில், 14 பேர், கணினி பயன்பாட்டில், 4 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர்.
சாதனை படைத்த மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்களை, பள்ளி தலைவர் ராஜமாணிக்கம், செயலர் மணி, கல்வி குழு தலைவர் கனகராஜன், பொருளாளர் ரவிக்குமார், துணைத்தலைவர் ரங்கசாமி, இணை செயலர் குமரேசன், இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், மாசிலாமணி, மதியழகன், சுசீலா, ஆனந்த், கார்த்திக், பள்ளி முதல்வர் அனுஷா ஆகியோர் பாராட்டினர்.

