/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி மேலும் ஒருவர் அதிரடி கைது
/
ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி மேலும் ஒருவர் அதிரடி கைது
ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி மேலும் ஒருவர் அதிரடி கைது
ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி மேலும் ஒருவர் அதிரடி கைது
ADDED : ஜூன் 07, 2025 01:09 AM
சேலம், ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி, ரூ.4.5 கோடி மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி, முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி, சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் பலரிடம், ரூ.4.5 கோடிக்கு மோசடி நடந்துள்ளது. ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் கென்னடி அளித்த புகார் அடிப்படையில், சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து வி
சாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் நித்யானந்தம், சந்திரா, அன்புமணி, முத்துசாமி, கேசவன், சார்லா கி ேஷார் குமார் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சேலத்தை சேர்ந்த பார்த்தசாரதி, 39, என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.