/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாதையில் செல்ல இடையூறு 10 பேர் மீது வழக்குப்பதிவு
/
பாதையில் செல்ல இடையூறு 10 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : செப் 19, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார் :ஓமலுார், பொம்மியம்பட்டி கலர்காட்டை சேர்ந்தவர் அம்மாசி, 55. இவர் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வழியில், உப்பாரப்பட்டி காலனியை சேர்ந்த சிலர் வழிமறித்து, 'இப்பகுதியில் யாரும் செல்லக்கூடாது' என மிரட்டி தகராறில் ஈடுபட்டனர்.
கடந்த ஆக., 24ல் மீண்டும் சிலர் வழி மறித்து தகராறில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அம்மாசி புகார்படி, உப்பாரப்பட்டி காலனியை சேர்ந்த, 10 பேர் மீது தொளசம்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர்.