/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூதாட்டிக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மீண்டும் நடக்க வைத்த காவேரி மருத்துவமனை
/
மூதாட்டிக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மீண்டும் நடக்க வைத்த காவேரி மருத்துவமனை
மூதாட்டிக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மீண்டும் நடக்க வைத்த காவேரி மருத்துவமனை
மூதாட்டிக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மீண்டும் நடக்க வைத்த காவேரி மருத்துவமனை
ADDED : ஜூலை 02, 2025 01:57 AM
சேலம், சேலத்தில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்த, 64 வயது மூதாட்டி, வலது முழங்காலில் வலி உள்ளதாக தெரிவித்தார். இதனால் அவர் மருத்துவமனையில், சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அறுவை சிகிச்சையை, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அருண், மணிவண்ணன் செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நோயாளி, 2024ல் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். இரு முழங்கால்களில் தேய்மானம் கண்டறியப்பட்டது. அதாவது முழங்கால்களில் உள்ள குருத்தெலும்பு தேய்மானம் அடைந்து, வலியையும் நடப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்தியது. இரு முழங்கால்களுக்கும் மாற்று அறுவை
சிகிச்சையை பரிந்துரைத்தோம். அவர் இடது முழங்காலில் மட்டும், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பல மாதங்களாக நன்றாக இருந்தார்.
சமீபத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாத வலது முழங்காலில் வலி ஏற்பட்டது. எந்த துணையுடனும் நடக்க முடியாமல் போனார். 'எக்ஸ்ரே' எடுத்து பார்த்தபோது, அவரது முழங்கால் மூட்டில் கடும் தேய்மானம் அடைந்திருந்ததோடு, அவரது வலது காலில் எலும்பு முறிவும் இருந்தது.
கடந்த ஏப்., 2025ல், வலது முழங்காலில் ஒரு முழுமையான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை செய்தோம். முறிவு, எலும்பு பலவீனம் ஆகியவற்றை கருதி, நீளமான உலோக கம்பியை உள் வைத்தோம். இந்த உள்வைப்பு பலவீனமடைந்த எலும்புக்கு கூடுதல் உறுதியை வழங்கும்.
சிறப்பு அறுவை சிகிச்சை நுட்பங்கள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு வழங்கப்பட்டதால், அறுவை சிகிச்சைக்கு மறுநாளே அவர், 'வாக்கர்' கருவி உதவியுடன் நடக்க தொடங்கினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.