/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரியார் பல்கலை பதிவாளர் மீது புகார்
/
பெரியார் பல்கலை பதிவாளர் மீது புகார்
ADDED : பிப் 02, 2024 11:15 AM
ஓமலுார்: பெரியார் பல்கலை பதிவாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பல்கலை ஆசிரியர் சங்க, மாநில தலைவர் பாலமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சருக்கு நேற்று அனுப்பிய கடிதம்:
சேலம் பெரியார் பல்கலையில், 2006ல் பணி நியமனத்தின்போது, கணினி
அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற, 4 பேர் நிராகரிக்கப்பட்டு,
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலை கணித துறையில்
முனைவர் பட்டம் பெற்றிருந்த, தற்போதைய பதிவாளர் தங்கவேல்(பொ), கணினி அறிவியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
அவர் பதிவாளர் பொறுப்பில் இருந்த காலத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில், நீண்ட கால நிலுவையில் இருந்த உள்ளாட்சி நிதி தணிக்கை தடையை நீக்க வேண்டி, சட்டத்துக்கு புறம்பாக கடிதம் எழுதியதும் அதை பரிசீலித்து விதிமீறி சேலம் மாவட்ட உள்ளாட்சி நிதி தணிக்கை துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், 2023 நவ., 6ல் நடந்த பல்கலை, 114வது ஆட்சி குழுப்பொருள் நிரலில், தங்கவேலுக்கு வரும், 29ல், 60 வயது பூர்த்தியாவதால் பணி ஓய்வு வழங்குவதோடு ஓய்வு உள்ளிட்ட இதர பலன்களை உள்ளாட்சி நிதி தணிக்கை துறை அனுமதி பெற்று விடுவிக்க வேண்டி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதனால் பணி நியமனம், தணிக்கை தடையை விதிமீறி நீக்குதல் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

