/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கான்ட்ராக்டரின் மனைவி படுகொலை: தாலியை கழற்றிச்சென்ற கும்பலுக்கு வலை
/
கான்ட்ராக்டரின் மனைவி படுகொலை: தாலியை கழற்றிச்சென்ற கும்பலுக்கு வலை
கான்ட்ராக்டரின் மனைவி படுகொலை: தாலியை கழற்றிச்சென்ற கும்பலுக்கு வலை
கான்ட்ராக்டரின் மனைவி படுகொலை: தாலியை கழற்றிச்சென்ற கும்பலுக்கு வலை
ADDED : ஜன 27, 2024 03:59 PM
நங்கவள்ளி: வீட்டில் தனியே இருந்த கான்ட்ராக்டரின் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த மர்ம கும்பல், அவர் அணிருந்திருந்த தாலிக்கொடியை கழற்றிச்சென்றனர்.சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே நரிக்கல்லுாரை சேர்ந்தவர் ஈஸ்வரன், 55.
பொதுப்பணித்துறை கான்ட்ராக்டர். இவரது மனைவி இந்திராணி, 45. இவர்களது மகன் கார்த்திக், 22, புதுச்சேரியில் மருத்துவம் படித்து வருகிறார். இவர்களது மகள் வளர்மதி, 25, திருமணமாகி கோவையில் வசிக்கிறார்.இந்நிலையில் ஈஸ்வரனும், இந்திராணியும் அங்குள்ள தென்னந்தோப்பு நடுவே தனி வீட்டில் வசித்தனர். நேற்று காலை வேலை நிமித்தமாக ஈஸ்வரன் வெளியே சென்றார். மதியம் அவர் திரும்பி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்கு வெளியே, தலை சிதைந்த நிலையில் இந்திராணி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அவர், நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஓமலுார் டி.எஸ்.பி., சங்கீதா உள்ளிட்ட போலீசார் விசாரித்தனர். மோப்ப நாய் மூலம் சோதனை நடந்தது. கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'வீட்டில் தனியே இருந்த இந்திராணி தலையில் கல்லை போட்டு கொலை செய்து அவரது தாலிக்கொடி சங்கிலியை கழற்றி எடுத்துச்சென்றுள்ளனர். வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளை போனதா என, விசாரணை தொடர்கிறது' என்றனர்.

