/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கழுத்தை நெரித்து மகள் கொலை தந்தையும், மகனும் தற்கொலை
/
கழுத்தை நெரித்து மகள் கொலை தந்தையும், மகனும் தற்கொலை
கழுத்தை நெரித்து மகள் கொலை தந்தையும், மகனும் தற்கொலை
கழுத்தை நெரித்து மகள் கொலை தந்தையும், மகனும் தற்கொலை
ADDED : ஜன 27, 2024 02:17 AM
சேலம்:சேலம், மாசிநாயக்கன்பட்டி, இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன், 54. கெமிக்கல் நிறுவனம் நடத்தினார். இவரது மனைவி நிர்மலா, 50. இவர்களது மகன் ரிஷி கேசவன், 30, பி.இ., முடித்து, தந்தையுடன் கெமிக்கல் தொழிலில் ஈடுபட்டார்.
இவரது மகள் பூஜா, 23, பி.காம்., படித்து, கோவையில் தங்கி, சி.ஏ., படிப்புக்கு தயாராகி வந்தார். இவர் விடுமுறையில், இந்திரா நகரில் உள்ள வீட்டுக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை நிர்மலா, அவரது உறவினருக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு, சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். பின் மாலை, 5:30 மணிக்கு வீடு திரும்பினார்.
அப்போது படுக்கையில், பூஜா கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாகி கிடந்தார்.
அதன் அருகே விட்டத்தில் உள்ள இரும்பு கம்பியில் வேட்டி, சேலையில் வெங்கடேஸ்வரனும், ரிஷி கேசவனும் துாக்கில் தொங்கியபடி பிணமாகி கிடந்தனர்.
நிர்மலா பார்த்து அலறித் துடித்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, மூன்று பேரையும் மீட்டு, அருகில் தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.
அங்கு, மூன்று பேரும் ஏற்கனவே இறந்தது உறுதியானது. அம்மாபேட்டை போலீசார், உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.
போலீசார் கூறுகையில், 'கடன் பிரச்னை இருந்ததாக, உறவினர்கள் தெரிவித்தனர். அதேநேரம் காதல் விவகாரம் காரணமா என்றும் விசாரிக்கிறோம்' என்றனர்.

