நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி, நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திரு-விழா கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சுவாமி ஊர்வலம் நடந்தது.
நேற்று முன்தினம் தேரோட்டம் தொடங்கியது. 2ம் நாளான நேற்று, சின்னமாரியம்மன் கோவில் தெருவில் இருந்து அங்கா-ளம்மன் கோவில் தெரு வரை, திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து வந்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரி-சனம் செய்தனர். நாளை வரை தேரோட்டம் நடக்கிறது.

