/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் 2.5 டன் வெடி மருந்து அழிப்பு
/
சேலத்தில் 2.5 டன் வெடி மருந்து அழிப்பு
ADDED : ஜூன் 08, 2024 02:47 AM
சேலம்: சேலத்தில் நேற்று, 2.5 டன் வெடி மருந்து, நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம், தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியிலிருந்து, கேரளாவுக்கு சென்ற லாரியை, போலீசார் கருப்பூர் அருகில் சோதனை செய்தனர். அப்போது லாரியில், 25 கிலோ எடை கொண்ட 100 பெட்டிகளில் வெடிமருந்தும், டெட்டனேட்டர் குச்சிகளும் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், கல்குவாரிக்காக கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.
அனுமதியின்றி வெடிபொருட்களை கொண்டு சென்ற, கிருஷ்ணகிரியை சேர்ந்த டிரைவர் இளையராஜா என்பவர் உள்பட, 6 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இரண்டரை டன் வெடிபொருட்கள், குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இவற்றை அழிக்க, சேலம் மாநகர போலீசார், நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றனர். இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் தீயணைப்பு துறையினர், நேற்று நகரமலை அடிவாரம் பகுதியில் உள்ள போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி திடலில், வெடிபொருட்களை குழிதோண்டி, வெடிக்க வைத்து, பாதுகாப்பாக அழித்தனர்.
அப்பகுதிக்கு யாரும்
செல்லாத வகையில், துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்
பட்டனர்.