/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக தி.மு.க., கவுன்சிலர் வாக்குவாதம்
/
ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக தி.மு.க., கவுன்சிலர் வாக்குவாதம்
ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக தி.மு.க., கவுன்சிலர் வாக்குவாதம்
ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக தி.மு.க., கவுன்சிலர் வாக்குவாதம்
ADDED : ஜன 10, 2024 10:44 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி, 8வது வார்டு கவுன்சிலர் புஷ்பாவதி, 48. தி.மு.க.,வை சேர்ந்த இவர், நேற்று மதியம், 12:00 மணிக்கு நகராட்சி அலுவலகம் வந்தார். அங்கு ஆய்வாளர் சரவணனிடம், 'குடிநீர், வீட்டுவரி, பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் அளித்து, 6 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. வீட்டு வரி, பெயர் மாற்றத்துக்கு, 20,000 ரூபாய் கேட்டீர்கள். அத்தொகையை தராததால் அலைக்கழித்து வருகிறீர்கள்' என கூறி வாக்குவாதம் செய்தார்.
தொடர்ந்து புஷ்பாவதி நிருபர்களிடம் கூறியதாவது:
குடிநீர், வீட்டு வரி, பெயர் மாற்றம் போன்றவற்றுக்கு மனு அளித்தாலும் வழங்குவதில்லை. தலா, 20,000 ரூபாய் லஞ்சம் கேட்பதால், 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை இல்லை. அலுவலர்கள் அலட்சியத்தால் ஓட்டுப்போட்ட வார்டு மக்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.