ADDED : ஜூன் 27, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், சேலம் விமான நிலையத்தில் உள்ள ஓடுதளத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நேற்று நடந்தது. விமான நிலைய இயக்குனர் வைதேகிநாதன் தலைமை வகித்தார்.
அதில் ஒரு ஜீப்பை விமானமாக கருதி, அந்த வாகனம், தீ விபத்தில் சிக்கியது போன்றும், பின் அதில் இருந்த பயணியரை மீட்டு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அனுப்புவது போன்றும், ஒன்றரை மணி நேரம் ஒத்திகை நடந்தது. இதில் விமான நிலைய தீயணைப்பு வீரர்கள், போலீசார், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், ஓமலுார் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபட்டனர்.