ADDED : மே 27, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் டி.ஆர்.ஓ., ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: காஸ் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக அறை எண், 115ல் வரும், 30ல் பிற்பகல், 3:00 மணிக்கு நடைபெற உள்ளது. காஸ் பதிவு செய்வதிலும்,
வினியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் குறித்து இதில் தெரிவிக்கலாம். வாடிக்கையாளர்கள், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள், முகவர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.