/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் கட்ட கிராம சபா கூட்டத்தில் வலியுறுத்தல்
/
காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் கட்ட கிராம சபா கூட்டத்தில் வலியுறுத்தல்
காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் கட்ட கிராம சபா கூட்டத்தில் வலியுறுத்தல்
காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் கட்ட கிராம சபா கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜன 27, 2024 03:55 AM
மேட்டூர்: குடியரசு தினத்தையொட்டி கொளத்துார் ஒன்றியத்தில் நேற்று, 14 ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம், அந்தந்த தலைவர்கள் தலைமையில் நடந்தன. அதில் காவிரி கரையோரம் உள்ள நவப்பட்டி கிராம சபா கூட்டம், கூராண்டிபுதுாரில் மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி தலைமையில் நடந்தது. அதில் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கும் போது காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது ஊராட்சியில் காவிரி கரையோரம் உள்ள மாதையன்குட்டை, நாட்டாமங்கலம், காவேரி கிராஸ், நவப்பட்டியில் உள்ள விவசாய நிலங்களில் அரிப்பு ஏற்பட்டு மண்சரிவு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் கட்ட, கிராம மக்கள், சப் - கலெக்டரிடம் வலியுறுத்தினர்.
மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் திடக்
கழிவு மேலாண் திட்டத்தில் குப்பையை கொட்டி தரம் பிரிக்க நிலம் ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மேட்டூர் தாசில்தார் விஜி, கொளத்துார் கமிஷனர் பானுமதி, பி.டி.ஓ., அண்ணாதுரை, நவப்பட்டி தலைவர் காளியம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மதுக்கடை இடமாற்ற முடிவு
தாரமங்கலம், பாப்பம்பாடி ஊராட்சி கிராம சபா கூட்டத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பள்ளிகள் அடிப்படை வசதி கட்டமைப்பு மேம்படுத்தல்; நத்தியாம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்ற உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தல் என்பன உள்பட, 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

