/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐ.ஓ.சி., தொழிலாளர்கள் 4ம் நாளாக வேலைநிறுத்தம்
/
ஐ.ஓ.சி., தொழிலாளர்கள் 4ம் நாளாக வேலைநிறுத்தம்
ADDED : ஜூன் 16, 2025 03:56 AM
சேலம்: சேலம், கருப்பூரில் உள்ள, இந்தியன் ஆயில் நிறுவனத்தின்(ஐ.ஓ.சி.,), காஸ் சிலிண்டர் நிரப்பும் பிளான்ட்டில், 80 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தினமும், 20,000 சிலிண்டர்களை நிரப்பும் பணியில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில், 12 ஒப்பந்த தொழிலாளர்கள் நீக்கப்பட்டனர். இதனால், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின், தமிழ்நாடு பெட்ரோலியம் காஸ் ஒர்க்கர்ஸ் யுனியன் சார்பில், ஒப்பந்த தொழிலாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், கடந்த, 11 முதல் ஈடுபட்டுள்ளனர். காஸ் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு, சிலிண்டர் வினியோகிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் பெருந்துறை பிளான்ட்டில் இருந்து, சிலிண்டர் வினியோகத்தை, ஐ.ஓ.சி., நிர்வாகம் மேற்கொண்டது.