/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டல் கழிப்பறையில் மொபைல் போனை வைத்து பல பெண்களை வீடியோ எடுத்த 'காமுகன்' கைது
/
ஓட்டல் கழிப்பறையில் மொபைல் போனை வைத்து பல பெண்களை வீடியோ எடுத்த 'காமுகன்' கைது
ஓட்டல் கழிப்பறையில் மொபைல் போனை வைத்து பல பெண்களை வீடியோ எடுத்த 'காமுகன்' கைது
ஓட்டல் கழிப்பறையில் மொபைல் போனை வைத்து பல பெண்களை வீடியோ எடுத்த 'காமுகன்' கைது
ADDED : பிப் 24, 2024 04:53 PM
சேலம் : ஓட்டல் கழிப்பறை சுவரில், மொபைல் போனை காகிதத்தால் மறைத்து வைத்து பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்த காமுகனை, போலீசார் கைது செய்தனர்.
அவர் யாருக்கு எல்லாம் வீடியோ அனுப்பியுள்ளார் என, போலீசார் பட்டியல் தயாரிக்கின்றனர்.சேலம், ஏ.வி.ஆர்., ரவுண்டானா அருகே தனியார் ஓட்டல் செயல்படுகிறது. அங்கு இரவிலும் டீ, பேக்கரி பொருட்கள் விற்பனை நடக்கிறது. இதனால் இரவில் வரும் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கு வரும் பயணியர் டீ குடிக்கின்றனர். பலர், இயற்கை உபாதை கழிக்க, ஓட்டல் வெளியே உள்ள கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த வாலிபர், அவரது மனைவியுடன் சென்று டீ குடித்தார். தொடர்ந்து அவரது மனைவி, இயற்கை உபாதை கழிக்க, கழிப்பிடத்துக்கு சென்றார். அப்போது பெண்கள் கழிப்பறை சுவரில், மொபைல் போன் கேமராவை ஆன் செய்து, அது வெளியே தெரியாமல் இருக்க, காகிதம், பிளாஸ்டிக் கவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்தார்.அதிர்ச்சியடைந்த அவர், உடனே வந்து கணவரிடம் தெரிவித்தார். அவர், ஓட்டல் காசாளர், சப்ளையருடன் சென்று பார்த்து, மொபைல் கேமராவை எடுத்தனர். அதை ஆய்வு செய்த போது ஓட்டலுக்கு வந்த பல பெண்கள், இயற்கை உபாதை கழிக்கும் ஆபாச காட்சிகள் பதிவாகி இருந்தன.இதையடுத்து அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த, கிச்சிப்பாளையம், பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த விஜய், 20, என்பவரிடம் விசாரித்தபோது அது அவருடைய மொபைல் போன் என தெரிந்தது. அதில் இருந்த பல பெண்களின் ஆபாச படங்கள் குறித்து கேட்டபோது, 'அது இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருந்தது' என கூறினார். இதையடுத்து மொபைல் போனுடன் அந்த வாலிபரை, சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்ததில், பெண்கள் கழிப்பிடத்தில் மொபைல் போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்து ரசிப்பதையும், நண்பர்களுக்கு அனுப்புவதையும் வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் விஜயை கைது செய்த போலீசார், அவரிடம் பறிமுதல் செய்த மொபைல் போனில் இருந்து, யார் யாருக்கெல்லாம் வீடியோ, போட்டோக்கள் அனுப்பப்பட்டுள்ளன என, பட்டியல் தயாரித்து வருகின்றனர்.