ADDED : மே 26, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: சேலம், இரும்பாலை அடுத்த பூசாலியூரை சேர்ந்த கூலித்தொழி-லாளி ராகுல், 35. நேற்று மதியம், 3:00 மணிக்கு நண்பர்களுடன் கொளத்துார், மூலக்காடு அருகே, மேட்டூர் அணை நீர்பரப்பு பகு-தியில் குளித்தார்.
அணையின் ஆழமான பகுதிக்கு சென்ற ராகுல் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தார். மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள், ராகுல் சட-லத்தை மீட்டு கொளத்துார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.