/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., அரசில், 'லாக்கப்' மரணங்கள் புதிதல்ல முதல்வருக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது: வானதி
/
தி.மு.க., அரசில், 'லாக்கப்' மரணங்கள் புதிதல்ல முதல்வருக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது: வானதி
தி.மு.க., அரசில், 'லாக்கப்' மரணங்கள் புதிதல்ல முதல்வருக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது: வானதி
தி.மு.க., அரசில், 'லாக்கப்' மரணங்கள் புதிதல்ல முதல்வருக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது: வானதி
ADDED : ஜூலை 02, 2025 01:58 AM
சேலம்,
''தி.மு.க., அரசில், 'லாக்கப்' மரணங்கள் புதிதல்ல. முதல்வருக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது. துாத்துக்குடியில் இதுபோன்ற சம்பவம் நடந்தபோது, ஸ்டாலின் மகன், மகள், சகோதரி என குடும்பமாக, அங்கு முகாமிட்டு பேசி வந்தனர். இன்று அதேபோன்ற சம்பவம், சிவகங்கையில் நடந்துள்ளது. அதை பூசி மெழுக பார்க்கின்றனர்,'' என, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து, சேலத்தில் நேற்று, அவர் அளித்த பேட்டி:
'அவசர நிலை' காலகட்டத்தில் ஒருவரது சுயநலத்துக்கு, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்டது. இருண்ட காலத்தில் நாடு இருந்துள்ளது. மீண்டும் ஒருமுறை அந்த சூழல் வந்துவிடக்கூடாது.
அரசியல் அமைப்பு சட்டத்தை, பா.ஜ.,வும், மோடியும் மதிக்கவில்லை என, காங்., கூறுகிறது. இதற்கு பதில் சொல்லாவிட்டால், அவர்கள் சொல்வது உண்மை என்றாகிவிடும். ஆனால், அரசியல் அமைப்பு சட்டத்தை, காலில் போட்டு நசுக்கியது, காங்., கட்சி. குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை தருவதற்காக, நாடு முழுதும் மாதிரி பார்லிமென்ட் கூட்டம் நடத்தி வருகிறோம்.
தி.மு.க., அரசில், 'லாக்கப்' மரணங்கள் புதிதல்ல. முதல்வருக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது. துாத்துக்குடியில் இதுபோன்ற சம்பவம் நடந்தபோது, ஸ்டாலின் மகன், மகள், சகோதரி என குடும்பமாக, அங்கு முகாமிட்டு பேசி வந்தனர். இன்று அதேபோன்ற சம்பவம், சிவகங்கையில் நடந்துள்ளது. அதை பூசி மெழுக பார்க்கின்றனர்.
பட்டியல் இன மக்கள் பாதிப்பு, பெண்கள் மீதான குற்றம், லாக்கப் மரணம் என, சிறிது சிறிதாக தி.மு.க., அரசு, தார்மீக கடமையில் முழுமையாக விலகிச்சென்றுள்ளது. எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமையாக உள்ள போராட்டம் நடத்த கூட தமிழகத்தில் உரிமையில்லை. எங்களுக்கு மட்டுமல்ல. அனைத்து கட்சிகளுக்கும் இதே நிலைதான் உள்ளது.
அரசியல் அமைப்பு வழங்கிய உரிமையை, தி.மு.க., மறுக்கிறது. தி.மு.க.,வின் எந்த விஷயத்திலும் உண்மை இருக்காது. இல்லாத விஷயத்தை மக்களிடம் பரப்புவதே அவர்களின் வேலை. மத்திய அரசு மீது மக்களுக்கு கோபம் வரவைக்க பார்ப்பது, ஹிந்தி திணிப்பு, மோடி எதிர்ப்பு என அவர்களது பிரசார யுக்தி, இதற்கு மேல் செல்லுபடியாகாது.
எந்த வழக்கையும், அமலாக்கத்துறை கைவிடும் சூழல் இல்லை. ஒருபோதும் தவறு செய்தவரை மத்திய அரசு விடாது. மின் கட்டண உயர்வுக்கு எதிராக, பா.ஜ., போராடும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. மின் கட்டணம், மாத கட்டணமாக பரிசீலிக்கிறோம் என பொய் வாக்குறுதி அளித்தனர். ஆட்சியின் நிறைவு காலம் வந்தும் நிறைவேற்றவில்லை. எல்லா இடத்திலும் சாதாரண மக்களை பிழியக்கூடிய அரசாக உள்ளது. ஒவ்வொரு அமைச்சர் மீதும், ஊழல் குறித்து நீதிமன்றம் குறை கூறி வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, பலம் பொருந்தியதாக தேசிய ஜனநாயக கூட்டணி மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.