ADDED : ஜன 26, 2024 10:03 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அம்மம்பாளையத்தில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவிக்கு என் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்தது. 62 வயது வரை உள்ளவர்களை மட்டுமே இப்பதவிக்கு நியமிக்க முடியும். என்னை நியமித்தால், 6 மாதங்கள் மட்டும் இப்பணியில் இருக்க முடியும் என, அரசின் பரிந்துரை மனுவை, கவர்னர் நிராகரித்தார். இப்பதவியை வழங்கியிருந்தால் சிறப்பாக பணிபுரிந்திருப்பேன். இனி மேல் அப்பதவி மீது விருப்பம் இல்லை. தமிழகத்தில் தொடர் குற்றங்கள் குறைந்துள்ளன. கல்வராயன்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம், 95 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வருவதால், அவற்றையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் சாராய விற்பனை, கடத்தல் பெரும் அளவு குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

