ADDED : மே 28, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் சேலம், மெய்யனுாரை சேர்ந்தவர் பிகாஷ் மாலிக், 41. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருவர், அவரை மிரட்டி, மொபைல் போனை பறித்துச்சென்றனர்.
இதுகுறித்து பிகாஷ் மாலிக் புகார்படி, சேலம் டவுன் போலீசார் விசாரித்ததில், சேலம், புதுத்தெருவை சேர்ந்த மணிகண்டன், 19, குகை, ராமலிங்க கோவில் தெருவை சேர்ந்த, 18 வயது சிறுவன் ஆகியோர் பறித்தது தெரியவந்தது. இதனால் இருவரையும், போலீசார் கைது செய்து, மொபைல் போனை மீட்டனர்.