/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா கோலாகலம்
/
முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா கோலாகலம்
ADDED : ஜூன் 03, 2025 01:15 AM
ஆத்துார், அம்மம்பாளையத்தில் நடந்த தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ஆத்துார் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா நோய் பரவல் மற்றும் தேர் செல்லும் வழிப்பாதை முறையாக அமைக்காததால், தேர்த்திருவிழா நடைபெறாமல் இருந்தது.
ஏழு ஆண்டுகளுக்கு பின், இந்தாண்டு தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்தனர். கடந்த மே, 28ல், காப்புக்கட்டுதல் மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன், வைகாசி தேர்த்திருவிழா துவங்கியது. நேற்று, 30 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில், முத்துமாரியம்மன் சுவாமி ஏற்றப்பட்டு, தேர்த்திருவிழா நடந்தது. பெண்கள், குழந்தைகள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர், அம்மம்பாளையம் கிராமத்தில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக திருவீதி உலா வந்தது. அம்மம்பாளையம், துலுக்கனுார், காட்டுக்கோட்டை, கல்லாநத்தம், முட்டல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.