sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்


ADDED : பிப் 02, 2024 09:53 AM

Google News

ADDED : பிப் 02, 2024 09:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று முதல் 4 நாட்களுக்கு

150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார இறுதி நாட்களில் சொந்த ஊர் செல்லும் பயணியர் வசதிக்கு, பிப்., 2 முதல், 5 வரை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் சேலம் கோட்டத்தின் முக்கிய நகரங்களில் இருந்து தொழில் நகரங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, மதுரை, பெங்களூரு, திருவண்ணாமலை, சிதம்பரம், திருச்சியில் இருந்து மறுமார்க்கத்திலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர், அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையங்கள், www.tnstc.in என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்து கொள்ளலாம். இத்தகவலை, சேலம் கோட்ட போக்குவரத்து மேலாண் இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இயற்கை உரம் வழங்கல்

இடைப்பாடி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகிறது. அந்த உரங்கள், குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்கப்படுகின்றன. ஆனால் போதிய ஆர்வமின்மையால், விவசாயிகள் உரங்களை வாங்கவில்லை. இதனால் இடைப்பாடி உழவர் சந்தையில் நகராட்சி சார்பில் விலையில்லாமல் இயற்கை உரங்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கமிஷனர் முஸ்தபா தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் பாஷா, விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை வழங்கினார்.

அண்ணாதுரை நினைவு தினம்தி.மு.க.,வினருக்கு அழைப்பு

தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் அறிக்கை:

தி.மு.க., நிறுவனர் அண்ணாதுரையின், 55வது நினைவு நாள், பிப்., 3ல்(நாளை) அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளை, ஒவ்வொரு கட்சி தொண்டரும் அனுசரிக்க, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சேலம் கிழக்கு மாவட்டத்தில், அன்று காலை, 9:00 மணிக்கு வாழப்பாடியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், அண்ணாதுரை படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்க வேண்டும்.

விலை உயர்ந்த பைக் திருட்டு

சேலம், சூரமங்கலம், காசக்காரனுாரை சேர்ந்தவர் ஜீவா, 21. இவர், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'பஜாஜ் பல்சர் என்.எஸ்., 100' பைக்கை, கடந்த, 26 இரவு, 10:00 மணிக்கு வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். மறுநாள் காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* காரிப்பட்டி அடுத்த சின்னகவுண்டாபுரத்தை சேர்ந்தவர் பூவரசன், 24. சென்ட்ரிங் தொழிலாளி. இவரது, 'யமஹா ஆர் 15' பைக்கை, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வீடு முன் நிறுத்தியிருந்தார். நேற்று காலை பைக்கை காணவில்லை. பூவரசன் நேற்று அளித்த புகார்படி காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்துகளை தவிர்க்க கண்காட்சி

இன்று முதல் பார்வையிடலாம்

சேலம் கோகுலம் மருத்துவமனை மேலாண் இயக்குனர் அர்த்தனாரி கூறியதாவது:-

விபத்துகளை தவிர்க்க, ஜன., 15 முதல், பிப்., 15 வரை, சாலை பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் கோகுலம் மருத்துவமனை சார்பில், 20 ஆண்டுகளில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி பகுதிகளில் சாலை பாதுகாப்பு புகைப்பட கண்காட்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புகைப்படம், வீடியோ கண்காட்சி, பிப்., 2(இன்று) முதல், 5 வரை, சேலம் அழகாபுரத்தில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடக்கிறது. கண்காட்சியை, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைக்கிறார். போக்குவரத்து துணை கமிஷனர் பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் கபீர் முன்னிலை வகிக்கின்றனர்.

எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், அருள், பாலசுப்ரமணியன், பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் சுந்தரேசன், லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் தன்ராஜ் பேசுகின்றனர். இதில் சாலை விதிகள் கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. காலை, 9:30 முதல் இரவு, 8:00 மணி வரை, கண்காட்சி நடக்கிறது. மக்கள் இலவசமாக பார்வையிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்காட்டில் 47வது மலர் கண்காட்சி பணி ஆரம்பம்

ஏற்காட்டில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்தப்படும். இதற்கான முதல்கட்ட பணியை, தோட்டக்கலை துறையினர் நேற்று தொடங்கினர். 'ஏற்காடு ரோஜா' என அழைக்கப்படும் டேலியா செடிகள், 4,000, கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்டு தொட்டிகளில் நடவு செய்யும் பணியை தொடங்கினர். அண்ணா, ஏரி பூங்காக்களில் உள்ள செயற்கை நீரூற்று அருகே மற்றும் தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணியர் கூடும் இடங்களில் பூ செடிகளை நடவு செய்யும் பணியையும் தொடங்கினர். இச்செடிகள் ஏப்ரல்,

மே மாதங்களில் பூக்கத்தொடங்கும்படி, தயார்படுத்தும் பணியில் தோட்டக்கலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிசைக்கு

தீ வைத்த

2 பேர் கைது

கொளத்துார், அம்பேத்கர் நகரை சேர்ந்த, பந்தல் அமைப்பாளர் பழனிசாமி, 50. இவர் அதே பகுதியில் குடிசை அமைத்து பந்தல் தளவாடங்களை இருப்பு வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு அந்த குடிசை எரிந்து பந்தல் பொருட்கள் கருகின. இதில் அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் புகார்படி கொளத்துார் போலீசார் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த ரவின்குமார், 25, விஜயகுமார், 23, ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கைதான இருவரும், குடிசை அருகே இரவில் அமர்ந்து மது அருந்துவர். இதை பழனிசாமி கண்டித்ததோடு, அவர்கள் மது குடிக்காமல் இருக்க முட்களை வெட்டி போட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் குடிசைக்கு தீ வைத்தனர்' என்றனர்.

வெவ்வேறு வழக்கில் 2 பேர் கைது

ரூ.80,000, 6 பவுன் சங்கிலி மீட்பு

சங்ககிரி அடுத்த நாகிசெட்டிப்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனியப்பன் மனைவி ஜெயலட்சுமி, 65. இவரிடம், 4 பவுன் சங்கிலியை கடந்த ஜன., 8ல் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

அதேபோல் கஸ்துாரிப்பட்டி, கவுண்டர் தெருவை சேர்ந்த ராஜமுத்து மனைவி கமலம், 67, என்பவரிடம், 19ல், 6 பவுன் சங்கிலியை பறித்து

சென்றனர்.

சங்ககிரி போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்தனர். அதில் கெங்கவல்லி, கடம்பூர், காட்டுக்கொட்டாயை சேர்ந்த தங்கவேல், 27, திருப்பூர், மணல் தோட்டத்தை சேர்ந்த ஜோதிபாஸ், 43, ஆகியோரை கைது செய்த போலீசார், 80,000 ரூபாய், 6 பவுன் சங்கிலியை மீட்டனர்.

முகம் சிதறி இறந்த நாய்: போலீஸ் விசாரணை

காடையாம்பட்டி தாலுகா கணவாய்புதுாரில் தனியார் மகளிர் கல்லுாரி உள்ளது. அங்கு கல்லுாரி நிர்வாகி வளர்த்த நாய், நேற்று காலை முகம் சிதறிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

வனப்பகுதி ஒட்டியுள்ள

அப்பகுதியில் இரவில் விவசாய தோட்டத்துக்கு காட்டுப்பன்றிகள் வந்து விளைநிலத்தை சேதப்படுத்துகின்றன. இதை தடுக்க, விவசாயிகள், கோழிக்குடல் சுற்றிய வெடி மருந்து பொட்டலத்தை வைத்துள்ளனர். அதை நாய் எடுத்து வந்து கடித்ததில் பொட்டலம் வெடித்து முகம் சிதறி இறந்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை

நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குப்பூர் காளியம்மன் கோவில்

தேரோட்டம் கோலாகலம்

ஓமலுார் அருகே குப்பூரில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 16ல் தொடங்கியது. நேற்று காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது. மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். அருகே தனி வளாகத்தில் உள்ள வன காளியம்மனுக்கு, பக்தர்கள் உயிருடன் கோழியை தொங்கவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாலை தேரோட்டம் நடந்தது. முன்னதாக மேள தாளத்துடன் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தி, ஊர் முக்கிய பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து கோவிலை சுற்றி இழுத்து வந்தனர். இன்று சத்தாபரணம், வாணவேடிக்கை, நாளை மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு

பெறுகிறது.

அதேபோல் பல்பாக்கியில் மகமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம்

செய்தனர்.

'15 ரயில்வே ஸ்டேஷனில்

ரூ.273 கோடியில் வசதிகள்'

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 2009 - 14ம் ஆண்டுகளில், 879 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது, 6,331 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வளர்ச்சி திட்டப்பணிகள் வேகமாக நடைபெறும்.

சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட, 15 ரயில்வே ஸ்டேஷன்களில், 'அம்ரீத்' திட்டத்தில், 273 கோடி ரூபாயில் அடிப்படை மேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகள், 40 சதவீதம் முடிந்த நிலையில், மீதி பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு சில மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

சேலம் கோட்டத்துக்குட்பட்ட ஊட்டி, குன்னுார், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில்வே ஸ்டேஷன்களில், மின்துாக்கி வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பாதைகள் மின்மயமாகும் பணி முடிந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், முதன்மை திட்ட மேலாளர் அனில்குமார் உடனிருந்தனர்.

மாநகராட்சியை கண்டித்து

பூ வியாபாரிகள் தர்ணா

சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட் வியாபாரிகள், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வணிக வளாகத்தில் விற்பனை செய்கின்றனர்.

அப்பகுதியில் பல்வேறு கடைகளும் உள்ளன. பூ மார்க்கெட்டுக்கு போடப்பட்ட மேற்கூரைகள், அங்குள்ள கடைகளை மறைப்பதாக புகார் எழுந்தது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் மேற்கூரை அகற்றப்பட்டது. இதையடுத்து வெயிலில் நின்று விற்கும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டதோடு, பூக்கள் விரைவில் வாடி விடுவதால் விற்க முடியாமல் குப்பையில் கொட்டும் நிலைக்கு

தள்ளப்பட்டனர்.

இதுகுறித்து புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் நேற்று மதியம், தர்ணாவில் ஈடுபட்டனர். டவுன் போலீசார் பேச்சு நடத்த, வியாபாரிகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அறிவித்து விட்டு கலைந்து சென்றனர்.

ரூ.4 கோடி நிலம்

மீட்ட மாநகராட்சி

சேலம், அய்யந்திருமாளிகை, சக்தி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான, 4 கோடி ரூபாய் மதிப்பிலான, 7,500 சதுரடி நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்திருந்தார். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நேற்று மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புக்களை அகற்றி வேலி அமைத்து, நிலத்தை மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.






      Dinamalar
      Follow us