sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'தி.மு.க., எந்த வியூகம் வகுத்தாலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்'

/

'தி.மு.க., எந்த வியூகம் வகுத்தாலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்'

'தி.மு.க., எந்த வியூகம் வகுத்தாலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்'

'தி.மு.க., எந்த வியூகம் வகுத்தாலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்'


ADDED : ஜூன் 30, 2025 03:34 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி பாக கிளை பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஆத்துாரில், எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமையில் நடந்தது.

இதில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசிய-தாவது:

அ.தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தது முதல், தி.மு.க.,வுக்கு துாக்கம் இல்லாமல், ஏதாவது ஒரு பொய்யை கூறி உளறி கொட்டி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதி குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதால், தி.மு.க.,வினர் மக்களை சந்திப்பதில்லை. ஆத்துார் தொகுதியில், அ.தி.மு.க., 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தி-யாசத்தில் வெற்றி பெறும். சேலத்தில், அ.தி.மு.க.,வை வெற்றி பெற, தி.மு.க., எந்த வியூகம் அமைத்தாலும், இ.பி.எஸ்., வியூகத்-திடம் தோற்று போகும்.

அ.தி.மு.க., ஆட்சி சாதனை திட்டங்களையும், தி.மு.க., ஆட்-சியில் சட்ட ஒழுங்கு பிரச்னை குறித்து, மக்களிடம் துண்டு பிர-சுரம் மூலம் எடுத்துரைக்க வேண்டும். இறந்த, வெளியூர் சென்ற வாக்காளர்களை கண்டறிந்து நீக்க வலியுறுத்த வேண்டும். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நிலஅபகரிப்பு செய்தவர்கள், உடந்தையாக உள்ள அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்-படும். பணம் கொடுத்து ஓட்டு பெறும், தி.மு.க., முயற்சியை முறியடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

ஒன்றிய செயலர்கள் ஆத்துார் கிழக்கு சேகர், தலைவாசல் வடக்கு ராமசாமி, மாநில நிர்வாகி காளிமுத்து, ஒன்றிய நிர்வா-கிகள் சதாசிவம், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us