/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 11, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், சேலம் மாவட்ட மையம் சார்பில், கோட்டை மைதானத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் காவேரி தலைமை வகித்தார்.
அதில் குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்குதல்; அகவிலைப்படி, மருத்துவப்படி, குடும்ப ஓய்வூதியம், இலவச மருத்துவ காப்பீடு வழங்குதல்; பொங்கல் பரிசுத்தொகையை உயர்த்தி பண்டிகை முன்பணம் தருதல் உள்பட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாநில செயலர் சுப்ரமணி பேசினார். மாவட்ட செயலர் லீலாதேவி, முன்னாள் செயலர் முருகபெருமாள், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அமராவதி உள்பட பலர் பங்கேற்றனர்.