/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராஜகணபதி கோவிலில் ரூ.45,000 காணிக்கை
/
ராஜகணபதி கோவிலில் ரூ.45,000 காணிக்கை
ADDED : மே 29, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் சேலம் ராஜகணபதி கோவிலில், அன்னதானம், காணிக்கை என, இரு உண்டியல்கள் உள்ளன. அதில் அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறக்கப்படும்.
அதன்படி நேற்று, சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் அம்சா முன்னிலையில், ராஜகணபதி கோவில் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு, கோவில் பணியாளர்கள், காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அதில், 45,084 ரூபாய் காணிக்கை இருந்தது. ராஜகணபதி கோவிலின் காணிக்கை உண்டியல் நாளை, சுகவனேஸ்வரர் கோவில் மண்டபத்தில் திறந்து எண்ணும் பணி நடக்க உள்ளது.