/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இந்தியாவில் 4ல் ஒருவர் அடிப்படை வசதியின்றி வாழ்கிறார்: உலக வங்கி
/
இந்தியாவில் 4ல் ஒருவர் அடிப்படை வசதியின்றி வாழ்கிறார்: உலக வங்கி
இந்தியாவில் 4ல் ஒருவர் அடிப்படை வசதியின்றி வாழ்கிறார்: உலக வங்கி
இந்தியாவில் 4ல் ஒருவர் அடிப்படை வசதியின்றி வாழ்கிறார்: உலக வங்கி
ADDED : ஜூலை 05, 2025 01:17 AM
புதுடில்லி, இந்தியாவில் வறுமை நிலையை போக்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், நான்கில் ஒருவர் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில், தனி நபரின் வாங்கும் திறன் நாளொன்றுக்கு 256 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நம் நாட்டில் வறுமையில் தவிப்போரின் எண்ணிக்கை 5 சதவீதம் மட்டுமே உள்ளதாக தெரியவந்துள்ளது. இது, 2011ல் 27 சதவீதமாக இருந்தது. தற்போது வெகுவாக சரிந்துள்ளது.
இதன்படி, 26.9 கோடி மக்கள், தீவிர வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். குறிப்பாக, உத்தர பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வசிக்கும் ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளது.
எனினும், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே வருவாயில் மிகப் பெரிய இடைவெளி காணப்படுகிறது.
நம் நாட்டின் பொருளாதார வளத்தில் 40 சதவீதம், பணக்காரர்களாக உள்ள 1 சதவீதத்தினரின் பங்களிப்பு உள்ளது. ஆனால், வருவாய் ஈட்டுவதில் பின்தங்கியுள்ள 50 சதவீத மக்கள், நம் நாட்டின் பொருளாதாரத்தில் 6.4 சதவீதம் மட்டுமே பங்களிப்பை வழங்கி வருவதாக உலக
வங்கியின் சமீபத்திய ஆய்வுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.
நகர்ப்புறங்களில் அதிக வீட்டு வாடகை, திடீர் வேலை இழப்பு போன்ற காரணங்களால் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோல் கிராமப்புறங்களில் நிலையற்ற வருவாய் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. இதுதவிர மருத்துவ அவசரநிலை, வேலை இழப்பு போன்றவை ஒரு குடும்பத்தை இக்கட்டான நிலைக்கு
தள்ளுகின்றன.
இந்நிலையில், வறுமைக்கோடு அளவை மக்களின் வாங்கும் திறனோடு கணக்கிடுவது பொருத்தமாக இருக்காது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: சர்வதேச அளவில் வறுமைக்கோடு அளவாக, ஒரு நபரின் வருவாய் நாளொன்றுக்கு 359 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் வறுமையை மதிப்பிட இந்த அளவு கோல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் அடிப்படையில் இந்தியாவில் நான்கில் ஒருவர், அதாவது, ஏழு கோடிக்கும் அதிகமானோர் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் பின்
தங்கியுள்ளனர்.
குறிப்பாக, சரிசமமான உணவு, பாதுகாப்பான வீடு, சுகாதார வசதி, கல்வி போன்ற அடிப்படை தேவைகள் பலருக்கு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே, இந்தியாவில் வறுமையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.