/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நுண்ணீர் பாசன கருவிகள் மானியத்தில் பெற வாய்ப்பு
/
நுண்ணீர் பாசன கருவிகள் மானியத்தில் பெற வாய்ப்பு
ADDED : ஜூலை 04, 2025 02:31 AM
பெ.நா.பாளையம்,பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள், நுண்ணீர் பாசன கருவிகளை, மானியத்தில் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெத்தநாயக்கன்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் வேல்முருகன் அறிக்கை:
நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர், தெளிப்பு நீர் மற்றும் மழைத்துாவான் ஆகிய கருவிகளை, வட்டாரத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும் அரசு வழங்குகிறது.
இதை பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறலாம். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு, அந்தந்த பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இல்லை எனில் பெத்தநாயக்கன்பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகவும். மேலும், 99524 17105 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.