/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேறு, சகதியாக மாறிய சாலை ரேஷன் கடைக்கு செல்வோர் அவதி
/
சேறு, சகதியாக மாறிய சாலை ரேஷன் கடைக்கு செல்வோர் அவதி
சேறு, சகதியாக மாறிய சாலை ரேஷன் கடைக்கு செல்வோர் அவதி
சேறு, சகதியாக மாறிய சாலை ரேஷன் கடைக்கு செல்வோர் அவதி
ADDED : ஜூன் 12, 2024 06:45 AM
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, அங்கண்ணன் தெருவில் உள்ள ரேஷன் கடையில், 600க்கும் மேற்பட்ட கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அங்குள்ள அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அப்பகுதியில் கழிவு நீர் செல்வதற்கு சாக்கடை அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், தெருவில் ஓடுகிறது. சில நாட்களாக தினமும் மழையால், கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து தெருவில் தேங்கி, சேறு சகதியாக மாறியுள்ளது.
இதனால் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி செல்லும் மக்கள், சேற்றில் வழுக்கி விழுகின்றனர். முதியோர், ரேஷன் கடைக்கே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அங்கன்வாடிக்கு குழந்தைகளை அழைத்துச்செல்லும் பெற்றோரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.