/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல் தலைமுறை வாக்காளருடன் பிரதமர் பேச்சு: சேலத்தில் 6 இடங்களில் திரளானோர் பங்கேற்பு

ADDED : ஜன 26, 2024 10:01 AM
சேலம்: முதல் தலைமுறை வாக்காளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் பேசிய நிலையில், சேலத்தில், 6 இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நாடு முழுதும், 5,000 இடங்களில், முதல் தலைமுறை வாக்காளர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பிரதமர் மோடி நேற்று பேசினார். இந்நிகழ்ச்சி சேலம், மரவனேரி மாதவம் மண்டபம்; கருங்கல்பட்டி வாணி மஹால்; இரும்பாலை சாலை பி.சி.சி., மண்டபம்; சீலநாயக்கன்பட்டி ராசி மஹால்; ஓமலுாரில் எஸ்.ஆர்.எஸ்., மஹால்; ஜலகண்டாபுரம் பா.ஜ., அலுவலகம் ஆகிய இடங்களில் நடந்தது.
இதில் ஏராளமான இளைஞர்கள், பெண்களுடன், பா.ஜ.,வின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, லோக்சபா பொறுப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட பொதுச்செயலர்கள் ராஜேந்திரன், சசிகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், தேசிய மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் நளினி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் கவுதம் உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.