ADDED : ஜன 10, 2024 10:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று முன்தினம் காலை முதல் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால் உள்ளூர் மக்கள், பணிக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கினர். இரவு முழுதும் மழை பெய்தது. 2ம் நாளாக நேற்றும் இடைவிடாது மழை பெய்தது. காலை முதல் பனி மூட்டத்துடன் பெய்த மழையால் ஏற்காடு மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். மதியம், 2:00 மணிக்கு, மழை ஓய்ந்ததால் சகஜ நிலை திரும்பியது.
அதேபோல் வாழப்பாடி, காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, சிங்கிபுரம், ஏத்தாப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. நேற்றும் காலை முதல் மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழல் காணப்பட்டது.

