/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'டேஷ் கேமரா' பொருத்தும் வாகன ஓட்டிகளுக்கு பரிசு
/
'டேஷ் கேமரா' பொருத்தும் வாகன ஓட்டிகளுக்கு பரிசு
ADDED : செப் 27, 2025 01:50 AM
சேலம், சேலம் கலெக்டர் அலுவலகம் முன், போக்குவரத்து போலீசார், வாகனங்களில், 'டேஷ் கேமரா' பொருத்துவது குறித்து, நேற்று மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் அனில் குமார் கிரி கூறியதாவது: 'சிசிடிவி கேமரா' இல்லாத இடங்கள் அல்லது 'சிசிடிவி'யை மறைத்து, சிலர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதால், சில நேரங்களில் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
அதனால், இரு, நான்கு சக்கர வாகனங்களில், 'டேஷ் கேம்' பொருத்தினால் அது குற்றவாளிகளின் கண்களுக்கு தெரியாது. அப்போது வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க, குற்றவாளிகளை பிடிக்க உதவியாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிக பாதுகாப்பாக இருக்கும் என்பதால், வாகனங்களில், 'டேஷ் கேமரா' பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 'டேஷ் கேமரா' பொருத்தி, 'சேலம் சிட்டி போலீஸ்' சமூக வலைதளத்தில் பதிவிடும் நபர்களுக்கு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலர், போட்டோவை பதிவு செய்து வருவதால், அனைத்து வாகனங்களிலும் விரைவில், 'டேஷ் கேமரா' பொருத்த வாகன ஓட்டிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

