/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஸ்னாக்ஸ்' கடையில் ரூ.19,500 திருட்டு
/
'ஸ்னாக்ஸ்' கடையில் ரூ.19,500 திருட்டு
ADDED : ஜன 08, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கருப்பூரில், 'புட்ஸ், ஸ்னாக்ஸ்' கடை மேற்பார்வையாளராக பிரவீன்குமார் உள்ளார். அங்கு பணியாற்றிய, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருவள்ளூவர் நகரை சேர்ந்த ரவி, 2021ல் வேலையை விட்டு நின்றார். சில மாதங்களுக்கு முன் மீண்டும் பணியில் சேர்ந்தார். அப்போது பொருட்கள் மொத்த விற்பனை, பணம் வசூலிக்கும் பணி வழங்கப்பட்டது.
தினமும் கடையின், டி.வி.எஸ்., 50 மொபட்டில் சென்று பணம் வசூலித்தார். கடந்த டிச., 30ல் சென்ற ரவி, 19,800 ரூபாயை வசூலித்து விட்டு, திரும்பி வரவில்லை. கடை ஊழியர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பிரவீன்குமார் புகார்படி, வசூல் பணம், மொபட்டுடன் மாயமான ரவியை, கருப்பூர் போலீசார் தேடுகின்றனர்.