/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாயிகளுக்கு ரூ.292 கோடி மானியம்
/
விவசாயிகளுக்கு ரூ.292 கோடி மானியம்
ADDED : செப் 29, 2025 01:52 AM
சேலம்:சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில், வேளாண் துறை சார்பில் வேளாண் பயிர் சாகுபடி, உணவு தானிய உற்பத்தி, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், பயறு விதைகள், தெளிப்பான்கள், தார்ப்பாய்கள், பண்ணைக்கருவிகள், சிறுதானியங்கள் பரப்பு அதிகரிக்கும் திட்டம், நுண்ணீர் பாசனம், அட்மா, சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு, 144.73 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தோட்டக்கலைத்துறை சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி, மானாவாரி மேம்பாடு, தமிழ்நாடு நீர்பாசன வேளாண் நவீனமயமாக்கல், நுண்ணீர் பாசனம், பரப்பு விரிவாக்கம், எந்திரமயமாக்கல், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் விவசாயிகளுக்கு, 147.79 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.இந்த இரு துறைகள் மூலம் விவசாயிகளுக்கு மொத்தம், 292.52 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

