/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாநகர் மாவட்ட நா.த.க., தலைவர் விலகல்
/
சேலம் மாநகர் மாவட்ட நா.த.க., தலைவர் விலகல்
ADDED : ஜூன் 03, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்நாம் தமிழர் கட்சியின், சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன், விலகுவதாக தனது முகநுால் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.
அதில் கடந்த, 2010 முதல் கட்சியில் எந்தவித எதிர்பார்ப்பும், சுயநலமும் இல்லாமல், இடைவிடாது கட்சியின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் தொடர்ந்து களப்பணியாற்றி
வந்தேன்.
ஆனால், சீமான் தற்போது எடுத்து வருகின்ற முடிவுகள், அறிவிப்புகள் களத்தில் உண்மையாக உழைத்தவர்களுக்கும், களத்தின் முன்னோடிகளையும், உதாசீனப்படுத்துவதாகவும், புறக்கணிக்கப்படுவதாகவும் உள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்போது கட்சியிலிருந்து விடுவித்து கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.