/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
/
போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
ADDED : ஜூன் 15, 2025 02:08 AM
சேலம், ஏற்காடு மலையடிவாரத்தில், சேலம் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி, நேற்று காலை, 7:00 முதல், 10:00 மணி வரை நடந்தது. ஆயுதப்படை டி.எஸ்.பி., இளங்கோவன் பயிற்சி அளித்தார். எஸ்.பி., கவுதம் கோயல், கூடுதல் எஸ்.பி.,க்கள் சோமசுந்தரம், செல்வ
ராஜ், பாலமுருகன், டி.எஸ்.பி.,க்கள் சுரேஷ்குமார், சதீஷ்குமார், சரவணகுமார், சாலராமசக்திவேல், சஞ்சீவிகுமார் பயிற்சி பெற்றனர். 10, 15, 20 அடி இடைவெளி முறையே, பிஸ்டலில், 20 ரவுண்ட், இன்சாஸ் 5, கண்ணீர் புகை துப்பாக்கி குண்டு, கையெறி குண்டு தலா, 2 ரவுண்டுகள் சுட்டு பயிற்சி பெற்றனர். இன்று போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள்,
துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.