/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சின்னேரிகாடு மூதாட்டி கொலை வழக்கு; சேலம் எஸ்.பி., ஆய்வு
/
சின்னேரிகாடு மூதாட்டி கொலை வழக்கு; சேலம் எஸ்.பி., ஆய்வு
சின்னேரிகாடு மூதாட்டி கொலை வழக்கு; சேலம் எஸ்.பி., ஆய்வு
சின்னேரிகாடு மூதாட்டி கொலை வழக்கு; சேலம் எஸ்.பி., ஆய்வு
ADDED : மே 27, 2025 02:02 AM
ஓமலுார், மூதாட்டி கொலை வழக்கு தொடர்பாக, சேலம் எஸ்.பி.,கவுதம்கோயல் விசாரணை நடத்தினார்.
காடையாம்பட்டி தாலுகா, கூக்குட்டப்பட்டி பஞ்., சின்னேரிகாடு பகுதியை சேர்ந்த மூதாட்டி சரஸ்வதி, 70. கடந்த, 20ல், மாடு மேய்க்க வனப்பகுதிக்குள் சென்ற போது, தோடு, மூக்குத்தி பறிக்கப்பட்டு தாக்கி கொலை செய்யப்பட்டார். அப்போது நாமக்கல் எஸ்.பி., கண்ணன், சேலம் பொறுப்பு எஸ்.பி.,யாக பணியில் இருந்தார். இவ்வழக்கில், சங்ககிரி மலை அடிவாரத்தில் பதுங்கியிருந்த, ஓமலுார் அருகே கட்டிக்கானுாரை சேர்ந்த நரேஷ்குமார், 25, என்பவரை சங்ககிரி போலீசார் சுட்டு பிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில், விடுமுறையில் இருந்த சேலம் எஸ்.பி.,கவுதம் கோயல், நேற்று மீண்டும் பணிக்கு திரும்பினார். நேற்று காலை, சின்னேரிகாடு மூதாட்டி சரஸ்வதி கொலை செய்யப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மூதாட்டி உறவினர்களிடம் விசாரித்தார்.