/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின் ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி
/
மின் ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி
ADDED : ஜூன் 06, 2025 02:34 AM
சேலம் :தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் வட்ட அளவில் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி சேலம் மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல் மாவட்ட மின்சார அலுவலகங்களில் பணிபுரியும், 100க்கும் மேற்பட்டோருக்கு, விளையாட்டு போட்டி, சேலம் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது.
சேலம் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார். கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, கபடி, டென்னிஸ், கூடைப்பந்து, தடகள போட்டிகள் நடந்தன. இன்று, சேலம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் கேரம், சதுரங்கம், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன. இதில் வெற்றி பெறுவோர், வரும், 16, 17, 18ல், ஈரோட்டில் நடக்க உள்ள மண்டல போட்டிக்கு தகுதி பெறுவர்.