/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆவினில் அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலை
/
ஆவினில் அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலை
ஆவினில் அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலை
ஆவினில் அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலை
ADDED : ஜூன் 13, 2025 01:45 AM
சேலம், சேலத்தில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்த, முடிவுற்ற பணிகள் விபரம்:
ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறை சார்பில் அன்னதானப்பட்டி, மொத்தையனுார், மோரூர், இனாம் பைரோஜி, கடத்துார், கல்லாநத்தம், திருமனுார், சந்திரப்பிள்ளை வலசு ஊராட்சி அலுவலகங்கள், பல்வேறு பகுதிகளில் புது ரேஷன் கடைகள், கதிரடிக்கும் தளங்கள், நுாலக கட்டடங்கள், உணவு தானிய கிடங்குகள், புது வகுப்பறை கட்டடங்கள், நீர் தேக்க தொட்டிகள், சிறு பாலங்கள், மயானங்கள் என, 49.95 கோடி ரூபாய் மதிப்பில், 169 பணிகள் பயன்பாட்டுக்கு வந்தன.
மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கொங்கணாபுரம், நங்கவள்ளி, கொளத்துார், பொன் நகர், ஆரியபாளையம் ஆகிய இடங்களில், 2 கோடி ரூபாய் செலவில் வட்டார சுகாதார மையம், சேலம் அரசு மருத்துவ கல்லுாரியில், 38.52 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட பல் மருத்துவ கட்டடம், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவாக்கவுண்டனுார், முல்லை நகர், பள்ளப்பட்டி, அபிராமி கார்டன், அழகாபுரம் புதுார் ஆகிய இடங்களில், 90 லட்சம் ரூபாயில் துணை சுகாதார நிலையம்.
கூட்டுறவுத்துறை சார்பில் கடம்பூரில், 30 லட்சம் ரூபாயில் வேளாண் அங்காடி, தேவகவுண்டனுார் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்கு, 13 லட்சம் ரூபாயிலும், பெரியகவுண்டாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு, 30 லட்சம் ரூபாயிலும், வேளாண் வணிக வளாகம்; வேளாண் பொறியியல் துறை சார்பில் காடையாம்பட்டி, இடைப்பாடியில், 40 லட்சம் ரூபாயில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், வட்டார வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய கூடம்.
நீர்வளத்துறை சார்பில் கிருஷ்ணாபுரம் சுவேத நதி குறுக்கே, 3.69 கோடி ரூபாயில் தடுப்பணை, புத்திரகவுண்டன்பாளையம் ஏரி வரத்து வாய்க்கால், 8.91 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு; வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை சார்பில் சங்ககிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 5.80 கோடி ரூபாயில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புது கட்டடம்.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தலைவாசலில், 58 லட்சம் ரூபாயில், கால்நடை மருந்தக கட்டடம்; பள்ளி கல்வித்துறை சார்பில் பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 42.36 லட்சம் ரூபாயில் வகுப்பறை கட்டடங்கள்; பால் வளத்துறை சார்பில், சேலம், தளவாய்பட்டி ஆவினில், 52.80 கோடி ரூபாயில், 7 லட்சம் லிட்டர் கொள்ளளவில், அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலை, பயிற்சியாளர்கள் தங்கும் விடுதி கட்டடம் உள்பட, 200.26 கோடி ரூபாய் செலவில், 225 முடிவுற்ற பணிகள், பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை
கீரைபாப்பம்பாடி விவசாயி கோவிந்தசாமி உள்ளிட்ட ஊர்மக்கள், சேலத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த மனு:
கீரைபாப்பம்பாடியில், 5,000 குடும்பத்தினர் வசிக்கிறோம். அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், எங்கள் கிராமத்தை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 10ம் வகுப்பு வரை மட்டும் உள்ளதால், மேற்படிப்புக்கு மாணவ, மாணவியர், 8 கி.மீ., செல்ல வேண்டியுள்ளது. அதனால் கீரைபாப்பம்பாடி உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.