/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாற்றுத்திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம்
/
மாற்றுத்திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம்
ADDED : ஜூலை 17, 2024 09:03 AM
சேலம், : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா-ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்-கான சங்கம், சேலம் மாவட்ட குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் அலுவல-கத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நேற்று நடந்தது.
அதில் மாவட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன், செயலர் குணசேகரன் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு, 1,500 ரூபாய், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஏரா-ளமானோருக்கு உத்தரவு பெற்று ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை உதவித்தொகை வழங்-கப்படவில்லை. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்-திலும் மாற்றத்திறனாளிகளுக்கு வாய்ப்பளிப்ப-தில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் அரிசி வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் வாழ்வாதாரம், உணவு, இருப்பிடம் இன்றி தவிக்கும் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவு செய்-துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவி-யாளர் ஜெகநாதன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழன் ஆகியோர் பேச்சு நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.