/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரியில் செத்து மிதந்த மீன்களால் துர்நாற்றம்
/
ஏரியில் செத்து மிதந்த மீன்களால் துர்நாற்றம்
ADDED : ஜன 17, 2024 10:46 AM
வீரபாண்டி: வீரபாண்டி அருகே இனாம் பைரோஜி புதுப்பாளையம் ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி நீர், உபரிநீர் கால்வாய் தண்ணீரை நம்பி அதன் சுற்றுவட்டாரங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அந்த ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
குறிப்பாக புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே ஏரி உபரிநீர் வழியும் கால்வாய் முதல் ஏரிக்கரை சாலை முழுதும் கரையோரங்களில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு உபரிநீர் கால்வாய் வழியே வயல்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு அடித்து செல்லப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள், செத்து மிதத்த மீன்களை அகற்றி சுத்தம் செய்வதோடு, மீன்கள் இறப்புக்குரிய காரணத்தை கண்டறிந்து கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

