/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீர்த்தக்குட ஊர்வலம்: இன்று கும்பாபிேஷகம்
/
தீர்த்தக்குட ஊர்வலம்: இன்று கும்பாபிேஷகம்
ADDED : மே 28, 2025 01:46 AM
ஆட்டையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி, ராசிபுரம் பிரதான சாலை, திருமணிமுத்தாறு கரையில் உள்ள துாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று காலை, 9:00 மணிக்கு மேல், 9:45 மணிக்குள் நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணிக்கு கணபதி, மஹாலஷ்மி ஹோமம் நடந்தது.
தொடர்ந்து ஏாளமான பக்தர்கள், பெரிய மாரியம்மன் கோவில்
வளாகத்தில் குடங்களில் தீர்த்தத்தை நிரப்பி பூஜை செய்தனர். பின் முக்கிய வீதிகள் வழியே தீர்த்த குடங்களை சுமந்து, ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். மாலை, முதல்கால வேள்வி பூஜை நடந்தது. இரவு, 9:00 மணிக்கு சிலைகளின் அடிப்பாகத்தில் எந்திரம், நவரத்தினம் வைத்து அஷ்ட பந்தம் செய்து சுவாமி சிலைகளை நிலை நிறுத்தம் செய்தனர். இன்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்கிறது.