/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'இந்த தேர்தல் வாய்ப்பை தவறவிடக் கூடாது' பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை
/
'இந்த தேர்தல் வாய்ப்பை தவறவிடக் கூடாது' பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை
'இந்த தேர்தல் வாய்ப்பை தவறவிடக் கூடாது' பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை
'இந்த தேர்தல் வாய்ப்பை தவறவிடக் கூடாது' பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை
ADDED : பிப் 06, 2024 11:17 AM
சேலம்: ''இந்த தேர்தல் வாய்ப்பை தவறவிடக்கூடாது,'' என பா.ஜ., தேர்தல் மேலாண்மைக்குழு கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேசினார்.
சேலம் பாராளுமன்ற தொகுதி, பா.ஜ., தேர்தல் மேலாண்மை பணிக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. இதில் வீரபாண்டி, இடைப்பாடி, ஓமலுார், சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு சட்டசபை தொகுதிகளில் உள்ள, பா.ஜ., மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேசியதாவது:
சேலம் பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை, அனைத்து பணிகளும் முறையாக நடந்து வருகிறது. நாம் மக்களை சந்தித்து வருகிறோம். இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள், வேட்பாளரை அறிமுகப்படுத்தும் பணி, கட்சியின் லட்சியங்களை மக்களிடம் சேர்க்க வேண்டியது உள்ளிட்ட பணிகள் உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அமைப்பு ரீதியான நிர்வாக பொறுப்புகளில் உள்ளவர்கள், தேர்தல் நேரத்தில் முறையாக பணிபுரிய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த குழுவின் முக்கியத்துவம் கருதி வரும், 11ல், மாநில தலைவர், இக்குழுவினருக்கு ஆலோசனை வழங்குகிறார். கட்சி பணி ஆற்றுவதில் சிரமமோ, பிரச்னையோ இருந்தால் முன்கூட்டியே தெரிவித்து விடுங்கள். பேருக்காக குழுவில் இருக்கிறோம் என யாரும் இருந்து விடாதீர்கள். இந்த தேர்தல் வாய்ப்பை நாம் தவறவிட்டு விடக்கூடாது.
இவ்வாறு பேசினார்.
தொகுதி அமைப்பாளர் அண்ணாதுரை, இணை பொறுப்பாளர் வெங்கடாசலம், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.