/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோடை விடுமுறையின் இறுதி நாளில் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

ADDED : ஜூன் 02, 2025 06:51 AM
ஏற்காடு: கோடை விடுமுறையால், ஏற்காட்டில் கடந்த இரு மாதங்களாக சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்தனர். கடந்த வாரம் முழுதும், 48வது கோடை விழா, மலர் காட்சி நடந்ததால், வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.
கோடை விழா கடந்த, 29ல் முடிந்த நிலையிலும், தொடர்ந்து சுற்றுலா பயணியர் வந்தனர். இந்நிலையில் கோடை விடுமுறையின் கடைசி நாள் ஞாயிறன்று வந்ததால், நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். அவர்கள், அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து ரசித்தனர். முக்கியமாக படகு இல்லத்தில் பயண சீட்டை வாங்கி நீண்ட வரிசையில் காத்திருந்து சவாரி செய்து மகிழ்ந்தனர்.சுற்றுலா பயணியர் ஏராளமானோர் குவிந்ததால் ஏரி, அண்ணா பூங்கா, படகு இல்ல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் போக்குவரத்து போலீசார், நெரிசலை சரிசெய்தனர். அதேபோல் மேட்டூர் அணை பூங்காவை நேற்று, 8,048 பேர் பார்வையிட்டனர். அதன் மூலம், 1,11,280 ரூபாய் கட்டணம் வசூலானது.