/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'நம்பர் பிளேட் இல்லாமல் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்'
/
'நம்பர் பிளேட் இல்லாமல் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்'
'நம்பர் பிளேட் இல்லாமல் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்'
'நம்பர் பிளேட் இல்லாமல் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்'
ADDED : ஜூன் 11, 2025 02:35 AM
சேலம், சேலம் மாநகரில், சாலை விதிகளை மீறுவோருக்கு, 'ஸ்பாட் பைன்' திட்டம் நடைமுறையில் இருந்தது. இதில், பல முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, அந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றால், 1,000 ரூபாய் அபராதமும், மது குடித்து வாகனம் ஓட்டினால், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், சேலம், 5 ரோடு பகுதியில் ஹெல்மெட் அணியாமல், வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் ஹெல்மெட் அணியாமல் சென்றால், கேமரா படம் பிடித்து சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகன உரிமையாளர்
களுக்கு, அபராத தொகை குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டு
வருகிறது.
இதை தவிர்க்க, இரு சக்கர வாகன ஓட்டிகள் நுாதன முறையில், அதாவது வாகனத்தின் பின் பக்க நம்பர் பிளேட்டை கழற்றி விட்டு செல்வதால், தானியங்கி கேமராவால் பதிவு செய்ய முடியாமல் திணறுகிறது.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறுகையில், ''இரு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டை கழற்றி விட்டு செல்வது, நம்பரை அழிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் வாகனங்கள்
பறிமுதல் செய்யப்படும்,'' என்றார்.