/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறந்த 50 'எலைட் ஸ்டெம்' நிறுவன பட்டியலில் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி

ADDED : ஜூலை 04, 2025 01:26 AM
சேலம், 'குரோனிகல்ஸ் ஆப் இந்தியா' என்பது, இந்தியாவின் ஒரு முன்னணி தனியார் அமைப்பு. இது ஆண்டுதோறும் கல்வித்
துறையில் சிறந்து விளங்கும் கல்லுாரி, பல்கலைகளை அங்கீகரித்து, தரவரிசை பட்டியல் வெளியிடுகிறது.நடப்பாண்டு, 'அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் மேலாண்மை துறைகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவன தரவரிசை' என்ற தலைப்பில், சமீபத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட்டது. அதில், விநாயகா மிஷினின் சேலம் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி, 'ஏ1' பிரிவில், இந்தியாவின் சிறந்த, 50 எலைட் ஸ்டெம் நிறுவன பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன்மூல
ம், இத்தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற ஒரே ஒரு அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி விநாயகா மிஷன் என, அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது, சிறந்த வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் புது செயல்பாடுகளை புகுத்தி மாணவர்களின் திறனை, எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றபடி மேம்படுத்துவதை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளதாக, அக்கல்லுாரி டீன் செந்தில்குமார் தெரிவித்தார். இதனால் டீன் செந்தில்குமாரை, பல்கலை வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா, துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.