/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் 'சைடுபோர்' போடும்போது பாறை விழுந்து தொழிலாளி பலி
/
கிணற்றில் 'சைடுபோர்' போடும்போது பாறை விழுந்து தொழிலாளி பலி
கிணற்றில் 'சைடுபோர்' போடும்போது பாறை விழுந்து தொழிலாளி பலி
கிணற்றில் 'சைடுபோர்' போடும்போது பாறை விழுந்து தொழிலாளி பலி
ADDED : ஜூன் 16, 2025 06:52 AM
தலைவாசல்: கிணற்றில் 'சைடுபோர்' போடும்போது பாறை உடைந்து விழுந்ததில் தொழிலாளி பலியானார்.
தலைவாசல், பகடப்பாடியை சேர்ந்த, விவசாயி மணிகண்டன், 45. இவரது விவசாய கிணற்றில், 'சைடுபோர்' போட ஏற்பாடு செய்தார். அதற்கு பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர், தர்மபுரி மாவட்டம், அரூர், கத்திரிப்பட்டியை சேர்ந்த வேலுசாமி, 23, உள்பட, 7 பேர் நேற்று, மணிகண்டன் கிணற்றில், 'சைடுபோர்' போடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கிணற்றின் பக்கவாட்டு பாறை கல் உடைந்து, வேலு-சாமி மீது விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டது தெரிந்தது. வீரகனுார் போலீசார் விசாரிக்-கின்றனர்.