/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லல் கோயிலில் பன்னீர் செல்வம் தரிசனம்
/
கல்லல் கோயிலில் பன்னீர் செல்வம் தரிசனம்
ADDED : ஜூன் 04, 2024 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : கல்லல் அருகே உள்ள இளங்குடி ஆண்டவர் நயினார் பெரியநாயகி அம்பாள் கோயிலில் முன்னாள் முதல்வரும் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி வேட்பாளருமான பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
700 ஆண்டு பழமையான இக்கோயிலில் தரிசனம் செய்தால் தடைகள் நீங்கி வெற்றி பெற முடியும் என்பது ஐதீகம். நேற்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 15 நிமிடங்கள் கோயிலில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.