/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க.,அரசை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க.,அரசை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2024 06:20 AM

சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் தி.மு.க., அரசை கண்டித்தும் தமிழகத்தில் மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தியதை கண்டித்தும் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ்சத்யன் கலந்து கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் உமாதேவன், நாகராஜன், கற்பகம், நகர செயலாளர் ராஜா, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் சேவியர் தாஸ், கருணாகரன், செல்வமணி, அருள் ஸ்டீபன், கோபி, சிவாஜி, பழனிச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குழந்தை மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைத் தலைவர் வக்கீல் ராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் கையில் அரிக்கேன் விளக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.