/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆடி செவ்வாய்: பால்குடம் எடுத்து நேர்த்தி
/
ஆடி செவ்வாய்: பால்குடம் எடுத்து நேர்த்தி
ADDED : ஜூலை 31, 2024 04:44 AM

காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது. ஆடி வெள்ளி ஆடி செவ்வாய்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதோடு பல்வேறு நேர்த்திக்கடன் செய்து வருகின்றனர்.
ஆடி செவ்வாயான நேற்று காரைக்குடி பிராமணர் சங்கம் சார்பில் முத்துமாரியம்மன் 9வது ஆண்டு ஆடி மாத பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை முத்துப்பட்டினம் ஐயப்பன் கோயிலில் இருந்து 133 பால் குடங்கள் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோ பூஜை, சிறப்பு ஹோமங்கள் சங்கரர், ரவி ஷர்மா, சிவா சார்பில் நடந்தது. பிராமண சங்கத் தலைவர் முத்து சுப்பிரமணியன் வரவேற்றார். பொருளாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார். ஆக.2 1008 சங்காபிஷேகமும், ஆக.7ம் தேதி வளையல் அலங்காரமும், ஆக.16ம் தேதி கோமாதா பூஜையும் நடைபெறுகிறது.