ADDED : ஜூலை 31, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார், : திருப்புத்துார் நேஷனல் அகாடமி சமுதாய கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முதல்வர் சுரேஷ் பிரபாகர் வரவேற்றார். எஸ்.ஐ., செல்வராகவன் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
எஸ்.ஐ., செல்வபிரபு, ரவி ஆகியோர் மாணவர்கள் நல்லொழுக்கம், நற்சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினர். ஆசிரியர்கள் சிவா, மது மோனிஷா, ஷாஷகான் ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.