/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புக்கள் தானம்
/
மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புக்கள் தானம்
ADDED : ஜூன் 13, 2024 06:00 AM

காரைக்குடி: காரைக்குடியில் விபத்தில் மூளை சாவு அடைந்த பெண்ணின், உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டதால் அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
காரைக்குடி நவரத்தின நகரைச் சேர்ந்தவர் குமார். இவர் மனைவி ஆனந்த வல்லியுடன் 54, பைக்கில் காரைக்குடி செக்காலை வீதியில் சென்றார். அவ்வழியாக வந்த கார், பைக்கில் மோதியதில் ஆனந்தவல்லி காயமடைந்தார். சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆனந்தவல்லி மூளைச்சாவு அடைந்தார். அவரின் குடும்பத்தார் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். ஆனந்த வல்லியின் இரு கண்கள் சிறுநீரகம் கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். இவரது உடல், இறுதிச் சடங்கு செய்வதற்காக காரைக்குடி நவரத்தின நகருக்கு கொண்டுவரப்பட்டது. தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை காரைக்குடி தாசில்தார் தங்கமணி, அரசு சார்பில் மரியாதை செய்தனர்.